பிரபல தொடலைக்காட்சியில் நயன்தாரா என்று செல்லமாகவும் கிண்டலாகவும் அழைக்கப்படும் நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா இன்று ஒரு ரௌடி பேபியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அறந்தாங்கி நிஷா 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி பிறந்தவர். அவர் ஒரு டிகிரி ஹோல்டர். புதுக்கோட்டையில் உள்ள ஜே.ஜே. ஆர்ட்ஸ் காலேஜில் 2008 – 2011 பேட்ஜ்ல அம்மணி டிகிரி படித்துள்ளார். இந்த தகவலை கேள்வி பட்ட அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிராமத்து பெண் போன்று தோற்றமளித்தாலும் இவ்வளவு படித்திருக்கிறாரா என்றும் வியப்படைந்துள்ளனர். நிஷா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே ரியாஸ் அலி என்பவருடன் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 10 நாள் திருமணம் முடித்து வைக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை அவரே நிஷாவின் எல்லா செயல்களுக்கும் ஊக்கம் கொடுத்து உடன் நிற்கிறார். ரியாஸ் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகப் பணியாளர். விஜய் டீவியில் கலக்கப்போவது யாரு சீசன் 5 இல் கலந்து கொண்ட இவர் தன்னுடைய முழு திறமையையும் காட்டி ரன்னர் அப்பாக வந்தார். அதைத் தொடர்ந்து சிரிச்சா போச்சு புான்ற ஏராளமான விஜய் டீவி ஷோக்களிலும் அவ்வப்போது சூப்பர் சிங்கரிலும் தலைகாட்டி வந்த இவர் சமீபத்தில் விஷய் டீவியில் தொடங்கப்பட்ட விஜய் ஸ்டார்கள் தங்கள் துணையுடன் சேர்ந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து போட்டியாளராகக் களம் இறங்குகிறார்.
இவர் குறும்படத் தயாரிப்பாளரும் கூட, ஆரம்பத்திலிருந்து தன்னுடைய எல்லா செயல்களுக்கும் தனக்கு தோள் கொடுக்கும் அவருடைய கணவருக்கு தானும் தன்னுடைய மனைவியைப் பார்த்துப் பார்த்து நடிக்க வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டதாம்.
அதனால் அவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக தன்னுடைய கணவரை வைத்து குறும்படம் ஒன்றைத் தயாரிக்கிறாராம். தொடர்ந்து டீவி ஷோக்களில் இவரைப் பார்த்து வந்த தனுஷ் அவரை அழைத்து மாரி2 வில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார். திடீரென அடித்த இந்த அதிர்ஷ்டத்தில் அவர் புகழின் உச்சம் சென்று விட்டார்.