ஆள் நடமாட்டமில்லாத சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின், செல்போன் பறிப்பு.மானசரோவர் பூங்கா டெல்லியில் உள்ளது ,அங்கு ஒரு பெண் ஆள்நடமாட்டம் இல்லா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தார் பின்பு அவரிடம் இருந்த செல்போனையும் எடுத்து சென்றுள்ளான்.
உடனே அவர், திருடன்… திருடன்… என கூச்சலிட்டார் அருகில் இருந்து யாரும் அங்கு வரவில்லை.அதற்குள் மர்மநபர் நகையை பறித்து விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து டெல்லி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அந்த பெண்ணிடம் கொள்ளையன் குறித்த அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர்.
பின்னர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை.சம்பவம் நடந்த இடத்தில CCTV காட்சிகளில் பதிவானதை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
செயின் பறிப்பு குறித்து அந்த பெண் அந்த பகுதி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.வைரலாகிவரும் வீடியோ பதிவு இதோ