நடிகர் உதயநிதியை குழந்தை பருவத்தில் பார்த்துள்ளீர்களா – இதோ, யாருடன் இருக்கிறார் பாருங்க

திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி இசுடாலின், மார்ச்சு மாதம் 2018 இல்தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் ; ஸ்டாலின் மகனாக, அவரின் அரசியல்வாரிசாக அரசியலுக்கு வரவில்லை. தொண்டர்களோடு தொண்டர்களாகவே இருக்க விரும்புகிறேன்; எந்த ஒரு கட்சி பதவியும் தேவையில்லை. பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. திமுக வின் கடைக்கோடி தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.

இனி என்னை அடிக்கடி திமுக மேடைகளில் காணலாம் எனக் கூறினார்.[6]2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரு ஆண்டாக முழு நேர அரசியலில் ஈடுபட்டார். 04.07.2019 அன்று திமுக இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

தமிழ் திரையுலகில் முதலில் தயாரிப்பாளராக வளம் வந்து, அதன்பின் ஹீரோவாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின்.ஆதவன் படத்தை உதலில் தயாரித்து, அதன்பின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இதன்பின், மனிதன் படங்கள் துவங்கி கடைசியாக வெளியான சைக்கோ படம் வரை நல்ல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் தற்போது ஆர்டிகள் 15 எனும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகரும், MLA வுமான உதயநிதி ஸ்டாலினின் குழந்தை பருவ புகைப்படம் வெளியாகியுள்ளது.இதில் தனது தாத்தா, திரு. கலைஞர் கருணாநிதி மற்றும் தனது தந்தை, தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இருக்கிறார் உதயநிதி.இதோ நீங்களே பாருங்க..