நடிகர் ஜெயம் ரவி அருகில் இருக்கும் பெண் யார்? இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம் உள்ளே

ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார்.இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி ட்விட்டரில் சிறு வயது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.ஜெயம் ரவியின் அக்காவுடன் சிறுவயதில் எடுத்து கொண்ட புகைப்படம் அது.

நேற்று முன்தினம் ரக்‌ஷா பந்தன் நாடு முழுக்க கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டு அக்காவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அது மட்டும் இன்றி, அவர் ட்விட்டரில் எங்கள் பெற்றோர் எங்களுக்கு கொடுத்த பரிசு என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுவயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரின் அக்காவா இது என்றும் ஆச்சிரியமாக கோள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ரசிகர்களும் வாழ்த்து கூறியுள்ளனர்.

இதேவேளை, நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவர் நடிப்பில் அண்மையில் டிக் டிக் டிக் படம் வெளியானது. விண்வெளியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சிறப்பை அது பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.