நடிகர் நடிகைகளை விடுங்கள், சன் டிவி கேரளா வெள்ளத்திற்கு எவ்வளவு தொகை கொடுத்தது தெரியுமா! கேட்டால் அசந்துருவீங்க !!

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 167 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன.கேரளாவில் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுளள்ன. இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்துவருவதால் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். 21 குழுக்களாக கப்பற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுளளதால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் இந்தியாவின் பிரபல நடிகர், நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழில் விஜய் சேதுபதி, தனுஷ், சித்தார்த், சூர்யா, கார்த்தி என பலரும் பண உதவி செய்து வருகின்றனர்.இந்நிலையில் தென்னிந்தியாவில் கொடிக்கட்டி பறக்கும் தொலைக்காட்சி சன் டிவி.இந்த சேனல் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 1 கோடி கொடுத்துள்ளதாம், இதை கேரளா முதலமைச்சர் கையிலேயே கொடுத்துள்ளனர்.