நடிகர் யோகிபாபுவை அசிங்கப்படுத்திய பிரபல தொகுப்பாளர்! சோகமான வாழ்க்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்ன தெரியுமா?

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு அவருடைய முடிதான் சோறு போடுவதாக கூறியுள்ளார்.அண்மையில் இடம்பெற்ற சர்கார் இசை வெளியிட்டு விழாவில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இசை வெளியிட்டு விழாவை தொகுத்து வழங்கிய நடிகர் பிரசன்னா அசிங்கப்படுத்துவது போல எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.’என் வாழ்க்கையில் மூளை சோறு போடல முடிதான் சோறு போடுகின்றது’. அதனால் நான் முடி வெட்டுவது இல்லை என்று கூறியுள்ளார்.

இதேவேளை, யோகிபாபு இப்போது நகைச்சுவையில் கொடி கட்டி பறக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலித்து டூயட் பாடும் காட்சியில் ரசிகர்களை அதிர வைத்தார்.அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் படத்திலும் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லை, விஜய் மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை என்று மேடையில் கூறினார்.

இதன் போது, இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் கூச்சலிட்டனர். தற்போது முன்னணி கதாநாயகர்கள் தங்கள் படங்களில் யோகிபாபு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.சினிமாவில் 6 வருடத்திற்கு மேல் போராடிதான் யோகிபாபு இந்த இடத்திற்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் அவரை கலாய்த்தார்கள் இன்று அவருக்கு என்று தனி இடம் உண்டு. இது அவரின் போராட்டத்திற்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி.

நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக மாறும் காலம் இது. வடிவேல், விவேக் ஆகியோர் ஏற்கனவே கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.சந்தானமும் கதாநாயகனாகி இருக்கிறார். சூரியும் கதாநாயகனாக நடிக்க தனது உடலை சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு மாற்றி இருக்கிறார்.அடுத்து யோகிபாபுவும் கதாநாயகனாகப் போகிறார் என்று பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. யோகிபாபுவின் இந்த வளர்ச்சி பல நடிகர்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.