எப்படியும் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை துவங்கி தேர்தலில் களம் இறங்குவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இதனால் ஏற்கனவே ரசிகர்கள் செம்ம அப்சர்ட் ஆக இருந்தார்கள்.மேலும் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கிவரும் ‘பேட்ட’ படத்தில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது அரசியல் பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.இந்நிலையில் தற்போது ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு இரண்டாவது திருமண வேலைகளும் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவர் அஸ்வினிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின் மகன் வேத்துடன் பெற்றோருடன் வசித்து வருகிறார். மேலும் திரைப்படங்கள் இயக்குவது, அனிமேஷன் பணிகள் ஆகியவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார்.இந்நிலையில் இவர் தொழிலதிபர் வணங்கா முடி என்பவருடைய மகன் ‘விசாகன்’ என்பவருடன் காதலில் இருந்ததாகவும். இந்த காதல் குறித்து அறிந்த ரஜினிகாந்த் தற்போது இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து தற்போது சௌந்தர்யா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ள மாப்பிள்ளையின் பெயர் ‘விசாகன்’ என்றும் அவரை பற்றிய சில தகவல் வெளியாகியுள்ளது. ‘விசாகன்’ வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்து விட்டு தற்போது.
தந்தையை தொழிலை கவனித்து வருகிறாராம். மேலும் இவருடைய புகைப்படம் ஒன்றும் வெளியாக வைரலாக பரவி வருகிறது.சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளதால். இவருக்கு பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.