நடிகர் விஜய்யின் மரணத்திற்கு காரணம் இது தான்..! உறவினர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்

திரைத்துறையைப் போலவே, மக்களால் அதிகளவில் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்கள் இடம்பிடித்து வருகின்றன.அப்படி, சின்னத்திரையில் தனது இயல்பான நடிப்பாலும், உடல் மொழியாலும் மக்களின் நன்மதிப்பை பெற்ற நடிகர் விஜயராஜ்.பழனியை சேர்ந்த விஜயராஜ். சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்த இவர், சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’, சீரியலில் நடிக்க தொடங்கினார் , கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் 850 எபிசோடுகளை கடந்து சன் டிவியில் அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையையும் பெற்றது.

இந்த சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்த விஜயராஜ் திடீர் மாரடைப்பால் கலமாகியுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெட்டி ஒலி மட்டுமின்றி,நாதஸ்வரம், கோலங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.இதுமட்டுமின்றி எம்டன் மகன், காதலும் கடந்து போகும், செம போத ஆகாத ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக சீரியல், பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள் உறவினர்கள்.சில மாதங்களுக்கு முன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அது குறித்துப் பேசிய போது கண் கலங்கியிருக்கிறார்.

தீபாவளியைக் குடும்பத்தோடு கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து பழனி சென்றிருந்த நிலையில் அங்கு மரணமடைந்திருக்கிறார். விஜயராஜின் மனைவி ராமலட்சுமி பழனி அருகேயுள்ள ஆயக்குடியைச் சேர்ந்தவர். ஒரே மகள் ஐஸ்வர்யா இரண்டாவது படிக்கிறார்.