நடிகர் ஸ்ரீகாந்த், லாரன்ஸின் சர்ச்சையை தொடர்ந்து விஷாலின் உண்மை முகத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி

தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அனைவர்களின் லீலைகளையும் கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது, தமிழ் திரையுலகம் பக்கம் வந்துள்ளார்.அதில் அவர் ஒவ்வொரு நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார்.

இதில் முதலில் சிக்கியவர் என்றால் அது இயக்குனர் முருகதாஸ் தான், இரண்டாவதாக நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி மோசமாக விமர்சித்து எழுதியிருந்தார். மூன்றாவதாக இவரின் சர்ச்சையில் சிக்கியவர் நடிகரும், நடன இயக்குனருமான லாரன்ஸ்.

தமிழக மக்கள் மனதில் நடிகர் என்பதையும் தாண்டி, சிறந்த மனிதராகவும்,போராளியாகவும், உதவும் பண்புகள் கொண்டவராக பார்க்கப்படும், இவரை பற்றி வெளியான தகவலால், பலர் ஸ்ரீலீக்ஸ் நடிகையை விமர்சித்தனர்.

இதைத்தொடர்ந்து இப்போது அவர் பேஸ்புக்கில், தமிழ் நடிகர் விஷால் ரெட்டி என்னை மிரட்டுவதாக தெரிகிறது. ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் விஷமிகள் பற்றி சொல்லியே ஆக வேண்டும் என பதிவு செய்துள்ளார்.