நடிகை சினேகா தமிழ் நடிகரின் மனைவிக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி! முழு குடும்பமும் மகிழ்ச்சியின் உச்சத்தில்

நடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று கொண்டவர். நான்கு வருடங்கள் பின்னர் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இது பார்வையாளர்கள் அனைவரையும் சிலிர்க்க வைத்த காட்சியாகும். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவரின் மனைவி கயல்விழி ஆசைபட்டார் என்று சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

அவரின் மனைவிக்கு நடிகை சினேகாவை ரொம்ப பிடிக்குமாம். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்பது மனைவி கயலின் நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இந்நிலையில் கயலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சினேகா வீட்டுக்கு அழைத்து சென்று அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகை சினேகாவும் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். அது மட்டும் இல்லை, நடிகர் சென்ராயனின் குடும்பமே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார.