நடிகை ஜோதிகாவிற்கு நள்ளிரவில் சூர்யா கொடுத்த அதிர்ச்சி! கார்த்தியை பாராட்டி தள்ளிய நடிகை? குவியும் பாராட்டுக்கள்

தமிழ் திரையுலகில் குறும்புத்தனமான நடிப்பால் அனைவரது மனதையும் கவர்ந்த ஒரு க்யூட்டான நடிகை தான் ஜோதிகா. ஆரம்ப காலத்தில் அமுல் பேபி போல் நன்கு குண்டாக இருந்த ஜோதிகா பலரது மனதில் கனவுக்கன்னியாக இருந்தார். நடிகர் சூர்யாவை காதலித்து வெற்றிகரமாக திருமணம் செய்து கொண்ட பின்னர் நீண்ட வருடம் நடிக்காமல் இருந்தாலும் இன்று மீண்டும் வெற்றிப்படங்களை ரசிகர்களுக்காக கொடுத்து வருகின்றார். தற்போது காற்றின் மொழி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் பல சுவாரஷ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜோதிகா நேற்று முன்தினம் 40வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அன்று இரவு நடிகர் சூர்யா மறக்க முடியாத இன்ப அதிர்ச்சி பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த பரிசு வாழ்நாளில் மறக்க முடியாது ஒன்று என்றும் கூறியுள்ளார். இதேவேளை, நடிகர் சூர்யாவின் தம்பியான கார்த்தி குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் தோழா திரைப்படம் மிக சிறப்பு என்றும், அதில் அவர் வரையும் சித்திரம் மறக்க முடியாத காட்சி என்றும் கூறியுள்ளார்.

அதற்கு பின்னர் எத்தனை திறைப்படம் வந்தாலும் தோழா படத்தை ரசித்த அளவு இல்லை என்றும் கூறியுள்ளார்.அது மட்டும் இன்றி, நடிகை ஜோதிகா சூர்யாவிற்கு அதிகமான காதல் பரிசுகளை திருமணத்திற்கு முன்னர் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 18ஆம் திகதி பிறந்தநாளை கொண்டாடிய ஜோதிகாவிற்கு பல நாடுகளில் உள்ள ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரின் திறமைகளையும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.