பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியல் நடிகை பிரியங்கா. இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இவர் மரணம் குறித்த போலீசாரின் விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரியங்காவிற்கும், அவரது கணவருக்கும் திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆன போதிலும் அவர்களுக்கு குழந்தை இல்லை.
தொடக்கத்தில், தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்வதை பிரியங்கா தள்ளி வைத்துள்ளார். அதன்பின், ஒரு நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள அவர் மருத்துவரை நாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குழந்தை இல்லாததால் கணவர் வீட்டாருக்கும் ப்ரியாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரியாங்காவை விட்டு தாய் வீட்டிற்கு பிரிந்து சென்ற கணவர் இரண்டு மாதமாக வரவில்லை. இவரது தொலைபேசி அழைப்பையும் எடுக்காமல் புரக்கணித்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பிரியங்கா மிகவும் தனிமை படுத்தப்பட்டுள்ளதுடன் இறுதியில் தனிமை என்கிற வார்த்தையில் வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து விட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.