நடிக்க வாய்ப்பு தருவதாக 20-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த மோகன் – நடிகை வெளியிட்ட வாட்ஸ் அப் வீடியோவில் அம்பலம்

துணை நடிகர்களின் ஏஜெண்டாக உள்ள கேஸ்டிங் மோகன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 20-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேஸ்டிங் மோகனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட் வாட்ஸ் அப் வீடியோ மூலமே இந்த தகவல் வெளிவந்துள்ளது. புதிய படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் தேவை என துணை நடிகர் ஏஜெண்டாக உள்ள கேஸ்டிங் மோகன் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் வெளியிடுவது வழக்கம். அந்த விளம்பரத்தை பார்க்கும் பெண்கள் வாய்ப்பிற்காக மோகனை பார்க்க வந்தால், அவர்களை மது அருந்த செய்து, அதன் பின் அவரகளை ஆட வைத்து ரசித்து எல்லை மீறி நடந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தனது படுக்கை அறையில் ரகசிய காமிராவை பொருத்தி வாய்ப்புக் கேட்டு வரும் நடிகைகளை ஆபாசமாக படம்பிடித்து வைத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட துணை நடிகை மித்ரா , அவர் வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை ஆபாசமாக படம் பிடித்ததாக கூறியுள்ளார் அப்படி ரகசிய கமெராவால் எடுக்கப்பட்ட அந்த வீடியோக்களில் கேஸ்டிங் மோகன் மட்டுமில்லாமல் பலரும் இருப்பதால், அது தொடர்பான வீடியோவை திரையுலகினர் பலரும் இருக்கின்ற வாட்ஸ் அப் குரூப்பில் மித்ரா வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவைக் கண்ட பலர், அதில் தங்களுக்கு தெரிந்த பெண்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் கேஸ்டிங் மோகனோ, இது தனக்கு தெரியாமல் தன்னுடைய செல்போனில் இருந்து ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டவை எனவும், தனது அறையில் ரகசிய காமிரா பொருத்தப்பட்டிருப்பது தனக்கே தெரியாது என்றும் மறுத்துள்ளார்.

இருப்பினும் அதில் இருக்கும் ஒரு வீடியோவில் கேஸ்டிங் மோகன், அந்த காமிராவை நோக்கி பார்க்கும் காட்சிகள் பதிவாகி இருப்பதால் பலரது அந்தரங்கத்தை படம் பிடிப்பதற்காக அவரே அதனை பொருத்தி இருப்பதாக குற்றச்சாட்டுகின்றனர். கேஸ்டிங் மோகனின் அத்துமீறலை ஆதாரங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். தற்போது அந்த வாட்ஸ் அப் வீடியோ திரையுலகினர் பலரிடையே வைரலாக பரவி வருகிறதாம்.