பாடகி சின்மயி வைரமுத்து மீது வைக்கப்பட்ட பாலியல் புகார் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின்பு மீ டூ பாலியல் விவகாரம் குறித்து பல பிரபலங்கள் மீது அடுத்தடுத்து புகார் ஏழுந்தது. இந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவும், பெண் கலைஞர்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் பாதுகாப்பு குழு அமைக்கவும், நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், விஷால் மீது பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். விஸ்வதர்ஷினி என்ற அப்பெண், அவரது முகநூல் பதிவில், சென்னை கோபாலபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு, அதிகாலை 2 மணியளவில் வந்துவிட்டு பின்பு இரண்டு மணி நேரம் கழித்து பின்வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஓடியுள்ளார்.
அந்த நேரத்தில் விஷால் வந்ததற்கு காரணம் என்ன?… பின் வாசல் வழியாக ஏன் ஓடினார் என்று கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் அவர் பல அட்டகாசங்கள் செய்துள்ளதாகவும், அதற்கு தன்னிடம் எல்லா ஆதாரங்களுக்கு இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது திரைத்துறையில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.