நடு ரோட்டில் இளம் காதல் ஜோடிக்கு பொது மக்கள் அடி உதை..!! வெளியான பகீர் காரணம்! மதுரையில் அரங்கேறிய விபரீதம்

மதுரையை அடுத்த கப்பலூர் உச்சப்பட்டியை சேர்ந்த சோலைராஜா மகள் பிரமிளா. முதுகலை பட்டம் பெற்ற இவர் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். மேலும் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வாடிப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித். இவரும் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வீடியோ எடிடிங்க் வேலை பார்த்து வருகிறார். மதுரையில் தங்கியிருந்து பணியாற்றி வந்த இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இவர்கள் காதல் வீட்டிற்கு தெரியாது. பிரமிளா – ரஞ்சித் காதல் கடந்த ஒன்றரை வருடமாக நீடித்து வருகிறது.

திருமண வயதை எட்டிய பிரமிளாவுக்கு கடந்த இரண்டு மாதமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் பிரமிளாவோ மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று கூறி வந்துள்ளார். மேலும் கல்யாண பேச்சை எடுத்தாலே அது பற்றி ஆர்வம் காட்டாமல் இருந்து வந்துள்ளார். இதனால் பிரமிளா பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மகள் மதுரையில் யாரையும் காதலிக்கிறாரா என அறிந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து மதுரையில் பிரமிளா தங்கியுள்ள அறைக்கு எதிராக அவரது அண்ணன் சுப்ரமணி காத்திருந்தார்.

மகளிர் விடுதியை விட்டு வெளியேறிய பிரமிளா சிறிது தொலைவு சென்ற நிலையில் இளைஞர் ஒருவர் அவருடன் இணைந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரமிளாவின் அண்ணன் அவர்களை மறித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத பிரமிளா அதிர்ந்துள்ளார். மேலும் தான் ரஞ்சித்தை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனால் சுப்ரமணிக்கு ஆத்திரம் வந்துள்ளது. இந்த தகவல் தெரிந்த பிரமிளா உறவினர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். ஆனால் பிரமிளா தனது பெற்றோருடன் செல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் வந்துள்ளது. அப்போது ரஞ்சித் பிரமிளாவின் சகோதரனை தாக்க முயன்றுள்ளார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து பிரச்சனையை தடுத்துள்ளனர். அப்போது பிரமிளாவின் உறவினர்கள் நடந்ததை கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரஞ்சித்தை நையப்புடைத்துள்ளனர். மேலும் தடுக்க முயன்ற பிரமிளாவுக்கும் அடி உதை விழுந்தது. ஒரு கட்டத்தில் பிரமிளாவின் காதலர் ரஞ்சித்தை அடித்து தள்ளிவிட்டு பிரமிளாவை ஆட்டோ வில் ஏற்றி வீட்டிற்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். இதை பற்றி மேலும்தம்தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்