நண்பர்களுக்காக மனைவியிடம் விபரீத கோரிக்கை வைத்த கணவர்..!அநியாயமாக உயிரிழந்த மனைவி..!! என்ன நடந்தது தெரியுமா ?

ஐதராபாத்தில் நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வற்புறுத்தி கணவன் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளப்பா மாதுரி (27) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஹனுமானந்தா ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அண்மையில் ஐதராபாத் திரும்பிய மாதுரி, நேரடியாக வீட்டிற்கு சென்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.ராவ் விடுமுறையின் போது தன்னுடைய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்துள்ளார்.

மேலும் அவர்களின் கண்முன் மனைவியை நிர்வாணமாக நடமாட வற்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.இதில் மனஉளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி வேறுவழின்றி தற்கொலை செய்து கொண்டார்.

இதேவேளை, இதுதொடர்பாக அவரது கணவரை கைது செய்த வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.