கூட்டு பாலியல் செய்து கல்லூரி மாணவி கொலை.இந்த சம்பவம் நாம் அனைவரையும் சற்று சிந்திக்க வைத்துள்ளது.காதல் என்று வார்த்தையை கூறி ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளக்குறிச்சி தாலுகாவில் உள்ள கச்சிராப்பலயத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி அவரது உடல் தண்ணீர்வற்றிய கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
.
சம்பவம் அறிந்து அங்கு விரைந்த விழுப்புரம் கண்காணிப்பு ஆய்வாளர் உடலை கைப்பற்றி மேலும் விசாரணையை தொடர்ந்தனர்விசாரணையில் அவர் வீட்டில் இருந்து 20ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.அவருடைய மொபைல் போனை வைத்து ஆய்வு செய்ததில் அவர் கடைசியாக அந்த பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவனிடம் பேசியுள்ளார்.
மேலும் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது அந்த மாணவி குணசேகரன் என்பவனை காதலித்து வந்ததாகவும் அவனுடன் தான் செல்ல இருந்தாக கூறப்பட்டது.பின்னர் குணசேகரன் தன்னுடைய நண்பர்கள் இருவரை அழைத்துள்ளான்.அந்த பெண் வைத்துஇருந்த பணத்தை வைத்து அவர்கள் மூவருக்கும் மது வாங்கிவர சொல்லி இருக்கான்.நடக்கப்போகும் சம்பவத்தை அறியாமல் அந்த மாணவி அங்கு இருந்துள்ளார்.
பின்னர் போதையில் இருந்த குணசேகரன் அந்த மாணவி இடம் தனிமையை கழித்துள்ளான்.பின்னர் அங்கு இருந்த அவனது இரு நண்பர்களும் ஒரு 15 வயது சிறுவனும் போதையில் அந்த பெண்ணை கூட்டு பாலியல் செய்துள்ளனர்.
அந்த மாணவி தன்னுடைய காதலன்னான குணசேகரனிடம் கதறி அழுதுள்ளார்.இதனால் கோவம் அடைந்த குணசேகரன் அந்த பெண்ணின் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான்.பின்னர் அவரது உடலை 300 மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் வீசியுள்ளான்.இந்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஒரு நிகழ்வு.
பெண்கள் தாய் தந்தையை தவிர வேறு யாரையும் நம்பக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் தான் ஒரு எடுத்துக்காட்டு.