நள்ளிரவில் வீட்டின் தனியறையில் அலறிய கல்லூரி மாணவி… கதவை உடைத்து சென்ற பெற்றோர் கண்ட காட்சி

சென்னையில் இரவில் நீண்ட நேரம் கண் விழித்து டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிண்டி சென்னை ஐஐடி வளாகத்தில் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் நர்மதா (18). இவர் பெண்கள் கல்லூரியில் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். நர்மதா நேற்று முன்தினம் இரவு படிக்காமல் கண் விழித்துக் கொண்டு நீண்ட நேரமாக வீட்டில் டிவி பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த நர்மதா அவரது அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டார். திடீரென அறையில் இருந்து அவரது அலறல் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக கதவை உடைத்து பார்த்தனர். அப்போது நர்மதா வயரில் தூக்குப்போட்டு

தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரின் பளு தாங்காமல் வயர் அறுந்ததால் கீழே விழுந்து உயிர் தப்பினார். இந்த காட்சியை கண்ட அவர் பெற்றோர் நர்மதாவை உடனடியாக

மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் விரைந்து வந்த அவர்கள் நர்மதா பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.