நவம்பர் மாத ராசி பலன்! யாருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது?

நவம்பர் மாத ராசி பலன்-எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது என்பதை இந்த பதிவில் பாப்போம் வாருங்கள்… மேஷ ராசிக்கு, இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியங்கள் இந்த மாத இறுதிக்குள் முடியும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நாளடைவில் நீங்கும். பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் நிறைய வரும். கணவன் மனைவிடையே சிறு சிறு பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பூர்விக சொத்து வகையில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. உடன் பிறப்பு வகையில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை. பொது பிரச்சனையில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களின் போது கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் நிறைய சிரமங்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க தாமதமாகும்.

கடகம்
கடக ராசிக்கு, இந்த மாதம் குடும்பத்தில் சுப செலவுகள் நிறையவே இருக்கும். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளில் ஆதாயமான பலன் பலன் கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். புது வீடு மாற்றம் ஏற்படும். புதிய வாகனம் ஒன்றை வாங்க முடியும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நண்பர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டாம். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை வெகுவாக உயரும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிட்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்

மீனம்
மீன ராசிக்கு, இந்த மாதம் குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். மற்றவர்களிடம் பேசும் பேச்சில் நிதானம் தேவை. வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவை. மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். பணவரவு அதிகரிப்பதால் சந்தோஷம் கூடும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். நண்பர்களிடம் எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பு கிட்டும். உடல் ரீதியாக ஒரு சில பிரச்சனைகள் வந்து பின் சீராகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எப்போதும் கவனம் தேவை. பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். சந்தோஷம் தரக்கூடிய செய்தி ஒன்று விரைவில் வரும். எதிர்பாராத பயணங்களால் உடல் அலைச்சலும், சோர்வும் வரக்கூடும். உத்யோகத்தில் இப்போது உள்ள வேலையிலிருந்து வேறு நல்ல வேலைக்கு மாற வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் ஏறு முகமாகவே இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு, இந்த மாதம் புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டு. உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையை கேட்பர். உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். குல தெய்வ வழிபாட்டில் தடை இல்லமல் செய்து முடிக்கவும். சொத்து வகையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்க வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வராமல் பார்த்துக்கொள்ளவும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்க வேண்டிவரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணம் அதிகம் இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்கு, இந்த மாதம் அதிக அலைச்சல் இருந்தாலும், அதற்கேற்ற அனுகூலமான பலன்களும் கிடைக்கும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகம் ஏற்படும். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறப்பு வகையில் நல்ல ஒற்றுமை இருக்கும். நண்பர்களின் வருகையும் அவர்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும், ஆகையால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொள்ளவும். மன உளைச்சல் பிரச்சனையால் உடல் நலம் பாதிக்ககூடும். தெய்வ சம்பந்தமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். உத்யோகம் தொடர்பாக நிறைய பயணம் செய்ய வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு, இந்த மாதம் புதிய முயற்சிகள் எதையும் இந்த மாதத்தில் தொடங்க வேண்டாம். மனதில் நினைத்த காரியங்களை தாமதமின்றி செய்ய முடியும். பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் வீண் விரயங்கள் ஏற்படும். பொது காரியங்களில் அதிகம் ஈடுபாடு ஏற்படும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உடன்பிறப்புகளிடைய நல்லுறவு ஏற்படும். கணவன் மனைவிடத்தில் ஒற்றுமை குறையும். உறவினர்களுடன் பேசும் போது வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகும். மற்றவர்கள் பாராட்டுபடி உங்கள் செயல்கள் இருக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உடல் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் அமையும். உத்யோகத்தில் பணி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகமாகும்.

கன்னி
கன்னி ராசிக்கு, இந்த மாதம் உங்கள் எண்ணங்கள் மற்றும் ஆசைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். எதை செய்வது எதை விடுவது என்ற குழப்பம் இருக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும். பொருளாதார சிக்கல் வந்தாலும் பெரிதாக பாதிக்காது. வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் நன்மை உண்டாகும். கனவன் மனைவிடையே இருந்த ஈகோ பிரச்சனை நீங்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். புதிய வீடு, புது வாகனம் வாங்க முடியும். உறவினர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். உங்களது தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் உருவாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். தொழில், வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்கு, இந்த மாதம் குடும்பத்துடன் சுமுக உறவு ஏற்படும். பேச்சில் எப்போதும் நிதானமும் செயலில் பொறுமையும் இருப்பது நல்லது. சொந்த பந்தகளுடன் வேண்டாத விவாதம் செய்ய வேண்டாம். நண்பர்களுடன் பழகும்போது சற்று நிதானம் தேவை. மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் செய்வதால் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையும், உதவியும் கிடைக்கும். மனக்குழப்பம் ஏற்படாமல் இருக்க யோகா தியானம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்படும். புதிய வீடு, புது வாகனம் வாங்க முடியும். பிறருக்கு வாக்கு கொடுப்பதையும், ஜாமீன் கையெழுத்து போடுவதையும் தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு பயணங்கள் மிகுந்த ஆதாயத்தை கொடுக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் வகையில் எதிர்பாராத பயணங்கள் ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு, இந்த மாதம் உங்கள் செயல்கள் அனைத்திலும் வேகமும், விவேகமும் இருக்கும். எதிர்பாராத சில வம்பு சண்டைகள் வரும். பண விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் ஒரு சில சிரமங்களை சந்திக்க வேண்டிவரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளிக்க முடியும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் சேமிப்பிற்கு சுப செலவுகள் வந்து சேரும். பகைவர்களை வெல்லும் ஆற்றல் உண்டாகும். கோர்ட்டு வழக்கு பிரச்சனைகளில் இழுபறி நிலை நீடிக்கும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் நடக்காமல் போகலாம். உத்யோகத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.

தனுசு
தனுசு ராசிக்கு, இந்த மாதம் பிரச்சனைகள் ஒரு புறம் இருந்தாலும் எதையும் எதிர்த்து நின்று ஜெயிக்கும் துணிச்சல் உங்களிடம் இருக்கும். முக்கிய விஷயங்களில் காரிய தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் சுபமாக முடியும். நீண்ட நாள் பிராத்தனையை உடனே நிறைவேற்றவும். குடும்பத்தினருடன் ஆன்மீக ஸ்தங்களுக்கு சென்று பாக்கியம் கிட்டும். பணப்புழக்கம் அதிகரித்தாலும் சில கசப்பான விஷயங்களையும் அனுசரித்து போக வேண்டியுள்ளது. கணவன் மனைவி உறவில் சந்தோஷம் இருக்கும். உடன்பிறப்புகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் சீராகும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க யோசனை வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் வந்தாலும் பயப்பட தேவையில்லை. பெண்கள் வகையில் நிறைய நன்மைகள் கிடைக்கும். சொத்து பிரச்சனையில் கோர்ட் கேஸ் என பல் நாள் அலைய வேண்டியதிருக்கும். பழைய பிரச்னையை நல்ல முறையில் தீர்க்க முடியும். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. புது தொழில், தொடங்க தகுந்த ஆலோசனை கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்கு, இந்த மாதம் எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வாய் ஜாலத்தினால் நினைத்த காரியங்களை சாதித்து கொள்ளலாம். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சொந்த பந்தங்களால் ஒரு சில தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பிறகு சீராகும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிடாத பயணங்கள் நிறைய இருக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தேவையில்லாத செலவுகளை கணிசமாக குறைத்து கொள்ளவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்க போராட வேண்டி இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்கு, இந்த மாதம் சற்றும் எதிர்பாராத வகையில் நிறைய மாற்றங்கள் வரும். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான காரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். உறவினர்களால் பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடன்பிறப்பு வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்கு பின் முடியும். கணவன் மனைவி இருவரும் வீண் வாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். வண்டி, வாகன சேர்க்கை உண்டு. வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பொது பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டிவரும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்.