நடிகர் விஷால் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யும் திகதியை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆந்திர தொழிலதிபர் விஜய்ரெட்டி என்பவரது மகள் அனிஷாவுக்கும், நடிகர் விஷாலுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தனது திருமணம் குறித்த தகவலை தற்போது விஷால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்ற தகவல் உண்மைதான். இது காதல் திருமணம். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு.
நாளை தான் எனது பெற்றோரும், அனிஷாவின் பெற்றோரும் சந்தித்து பேசுகிறார்கள். இதில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண திகதி முடிவு செய்யப்படும். இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். திருமண திகதியை இந்த வார இறுதியில் அறிவிப்போம். அனிஷா ரெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
எங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு இது தெரிந்துவிட்டது. திருமணத்துக்கு தயாராகிவிட்டேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்பு தான் எனது திருமணம் நடக்கும் என்று கூறினேன்.
அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு அனிஷாவை திருமணம் செய்வேன். திருமணம் சென்னையில் தான் நடக்கும்’ என தெரிவித்துள்ளார்.