உயிர் பயத்தில் இலங்கையிலிருந்து கனடா தப்பி வந்த பவித்ராவின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவு கிடைத்த நிலையிலும், அவரது குடும்பம் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.’Perfect’ immigrant என்று பத்திரிகைகளால் புகழப்பட Leony Lawrence Pavithra (22), தான் நாடு கடத்தப்பட்ட காரணம் இதுவரை தனக்கு புரியவில்லை என்றும், கனடாவுக்கு மீண்டும் திரும்புவோம் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் நாடு கடத்தப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், இன்னும் எதிர்காலம் இருண்டதாகவே ஆகி வருவதாகத் தெரிவித்துள்ளார் அவர்.
அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது என்று கூறும் Pavithra, தான் மீண்டும் கனடா திரும்பும் நம்பிக்கையிலிருப்பதாகத் தெரிவிக்கிறார். இங்கிருப்பது பாதுகாப்பானது அல்ல என்று கூறும் Pavithra, வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருக்கிறோம் என்கிறார். தூங்குவதும் காத்திருப்பதுமே முழு நேர வேலையாகிவிட்டது என்று ஊறும் Pavithra, தனக்கு மகிழ்ச்சியை தரும் ஒரே விடயம் தனது மருமகளான ஒன்றரை வயது Leanna Aarohiயை கவனித்துக் கொள்வதுதான் என்கிறார். ஓராண்டிற்குமுன் Leony Pavithra Lawrenceஇன் குடும்பம் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருக்கும் செய்தி பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. மருத்துவராக வேண்டும் என்ற கனவில் கனடா வந்த Pavithraவுக்கு ஆதரவாக, அரசியல்வாதிகளும் பள்ளி ஊழியர்களும் பேரணி நடத்தியும் அவர்களது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அவர்கள் எதற்காக நாடு கடத்தப்பட்டார்கள் என்பதை அறிய பத்திரிகைகள் முயன்றும், இதுவரை கனடா அரசு தரப்பிலிருந்து பதிலில்லை. கடந்த ஜனவரியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒரு மாணவியாக Pavithra மீண்டும் கனடா வருவதற்கான சாத்தியங்களை ஆராய்வதாகக் கூறியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
Pavithraவின் தந்தை Lawrence விசா பெறுவதற்காக எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே காலம் கழிக்கும் Lawrenceஇன் குடும்பம் இம்முறை பணியாளர்களாகவாவது கனடா திரும்ப, முயற்சி செய்ய இருக்கிறது.