நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கின், குற்றவாளிகள் திகார் சிறைக்கு மாற்றம்!!! – விரைவில் தண்டனை வழங்கப்படுமா?

உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிர்பயா வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனை உடனடியாக நிறைவேற்ற பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த அவசர நிலைக்கு கரணம் டாக்டர் பிரியங்கா ரெட்டியின் சோகமான சம்பவம் தான் என்று பலரும் கூறப்படுகின்றனர்.  இந்நிலையில், திகார் சிறையின் மூத்த அதிகாரி பவன் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகேஷ் சிங், வினேய் சர்மா, அக்ஷை ஆகியோர் திகார் சிறை இரண்டில் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், நான்கு குற்றவாளிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மற்ற குற்றவாளிகளால் தீங்கு நேராலாம் என்பதற்காக அவர்கள் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார். இது குறித்து மற்ற அதிகாரிகள், இது பாதுகாப்பு நடவடிக்கை மட்டும்தான் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், கருணை மனு நிராகரிக்கப்பட்டபின் கைதிகள் வைக்கப்படும் திகார் சிறைபிரிவின் பராமரிப்பு பணிகள் துவங்கிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், அங்கு தண்டனை ஆட்கள் இல்லை என்றால் நாட்டின் ஏதேனும் பகுதியில் இருந்து ஆட்கள் அழைத்துவரப்படுவார்கள். முன்னதாக பக்சர் சிறையில், தண்டனை கொடுக்கும்  கயிறுகள் தயாரிக்கும் பணிகள் துங்கிவிட்டதாகவும் அங்குள்ள அதிகரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இத்தகைய தாயர் நிலைகள் அனைத்தும், விரைவில் நிர்பயா குற்றவாளிகளின்  தண்டனையை நிறைவேற்றுவதற்காகவே என்று யூகங்கள் தெரிவிக்கின்றன.