நான் காதலித்த அபிராமியா இப்படி செய்தாள்! கதறும் அபிராமியின் கணவர் விஜய்

நான் காதலித்த அபிராமியா இதைச் செய்தார் என்பதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை என்று கண்ணீர் மல்க கணவர் விஜய் கூறியுள்ளார்.கடலூரை சேர்ந்த நான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டகிரிங் படிப்பதற்காக, சென்னைக்கு வந்தேன். அப்போதுதான் அபிராமியுடன் காதல் வயப்பட்டு அவளது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டேன்.கேட்டரிங் வேலையைவிட வங்கி வேலையில் நல்ல சம்பளம் கிடைத்தது. இதனால் வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றுகொண்டிருந்தது.கடந்த 31-ம் தேதி எனக்குப் பிறந்தநாள். அதையொட்டி மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றேன்.

அன்று இரவு எனக்கும் குழந்தைகளுக்கும் குடிப்பதற்குப் பால் கொடுத்தார் அபிராமி.அதைச் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டோம். காலையில் எங்களுக்கு முன் எழுந்து அபிராமி டிபன் செய்துகொண்டிருந்தார். நானும் அஜய்யும் எழுந்தோம். ஆனால், கார்னிகா மட்டும் கண்விழிக்கவில்லை.நான் குழந்தைக்கு முத்தம் கொடுக்க சென்றபோது கண்விழிக்கவில்லை. நான் வேலைக்கு புறப்பட்டபோது வாசல் வரை வந்து சிரித்தபடியே அபிராமி டாடா காட்டினார்.

வீட்டுக்கு வந்தப்பிறகுதான், கார்னிகா, அஜய் இறந்து கிடந்தது தெரியவந்தது. எனது குழந்தைகளை பார்த்து நான் கதறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது கூட, எனது அபிராமிதான் இப்படி செய்திருப்பாள் என சந்தேகப்படவில்லை.பொலிசார் விசாரித்தபிறகுதான், அபிராமிதான் குழந்தைகளைக் கொலை செய்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

நான் காதலித்த அபிராமியா இதைச் செய்தார் என்பதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. வழக்கமாக வேலைக்குச் செல்லும்போது கார்னிகாவுக்கு முத்தம் கொடுப்பேன்.ஆனால், அவள் இறந்ததுகூட தெரியாமல் முத்தம் கொடுக்கச் சென்றேன். அதை அபிராமி தடுத்துவிட்டார். நான் முத்தம் கொடுத்திருந்தால் உண்மையைக் கண்டுப்பிடித்திருப்பேன். அஜய்யையும் காப்பாற்றியிருப்பேன் என கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.