நிச்சயதார்த்தம் முடிந்த நேரம்! விபத்தில் சிக்கி விஷால் படுகாயம்! அதிர்ச்சியில் அனிஷா!

திருமண நிச்சியதார்தம் முடிந்த கையோடு நடிகர் விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 50 நாள் தொடர்ந்து துருக்கி நாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று துருக்கியின் Cappadocia நகரில் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஒரு ஆக்சன் சீன்ஸ் இந்த இடத்தில் எடுக்கப்பட்டு வந்தது. இதில் விஷால் ATV All-terrain vehicle வாகனத்தை ஓட்டி வந்தார். இது நான்கு சக்கர பைக் ஆகும். எந்த மாதிரியான சூழ்நிலையிலும் இந்த வாகனத்தை நாம் ஓட்டிச் செல்லலாம்.

ஆக்சன் சீன் காட்சிப்படுத்தப்பட்ட இந்த வண்டியை போது வேகமாக ஓட்டிய விஷால் திடீரென வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதன் காரணமாக படுகாயமடைந்த விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரது இடது கை மற்றும் இடது காலில் பெரும் அடிபட்டுள்ளது என தெரியவந்துள்ளது. எலும்பு முறிவுவும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது அந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்டன்ட் காட்சி டான்ஸ் மாஸ்டர் அன்பறிவால் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக

தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இவ்வாறு விஷால் படுகாயம் அடைந்ததால் தற்போது சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.