நீ எல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா, அது நான் இல்லைங்க- சிவகார்த்திகேயன், அருண்விஜய் என்ன பஞ்சாயத்து?

சினிமா பின்னணி இல்லாத சிவகார்த்திகேயனோ மெரினா தொடங்கி ரெமோ வரை 9 படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்திருக்கிறார். அதுதான் இங்கு பிரச்சினை. வேற்று மொழி நடிகர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வாழ்த்து பா வாசிக்கும் மீடியா முதல் திரைப்பட துறையினர் வரை சிவகார்த்திகேயனுக்கு ஆதரவில்லை நிலையிலும். சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகிவிட்டார்.

தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை அவர் உருவாக்கிவிட்டார்.இந்நிலையில் இவர் நடிப்பில் சீமராஜா ட்ரைலர் நேற்று வர, அருண் விஜய் தன் டுவிட்டரில் நடு இரவு ‘நீ எல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா?’ என்பது போல் டுவிட் செய்தார்.

இவர் சிவகார்த்திகேயனை தான் சொல்கின்றார் என்று அனைவருக்கும் தெரிந்தது, பிறகு காலை ‘அந்த டுவிட் நான் செய்யவில்லை, என் ஐடி-யை யாரோ ஹாக் செய்துவிட்டார்கள்’ என்றார்.

எப்போதும் பிரபலங்கள் இது போல் டுவிட் செய்துவிட்டு, பிறகு ஹாக் செய்து விட்டார்கள் என்பது வாடிக்கை தான், ஆனால், அருண்விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் என்ன பஞ்சாயத்து என்பதே அனைவரிம் கேள்வியும்.