நெல்லை கல்லூரி வகுப்பறையில் மது விருந்து! போதையில் மாணவிகள் போட்ட கெட்ட ஆட்டம்! வைரல் வீடியோ! உண்மையில் நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பள்ளிக்கூடத்தில் அமைந்துள்ளது தெட்சன மாற நாடார் சங்க கல்லூரி. இந்தக் கல்லூரியில் நேற்று ஆண்டு விழா கொண்டாடப் பட்டுள்ளது. ஆண்டு விழா முடிந்த கையோடு மாணவிகள் சிலர் வகுப்பறையில் அடித்த கூத்து தான் தற்போது பிரச்சினையாகியுள்ளது. வகுப்பறைக்கு வந்த மூன்றாம் ஆண்டு மாணவிகள் சிலர் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த பியர் பாட்டில்களை ஓபன் செய்து மடக் மடக்கென குடிக்க ஆரம்பித்தனர். ஒரு மாணவி குளித்ததை மற்றொரு மாணவி பிடுங்கி இதுவரை ருசி பார்க்க ஆரம்பித்தார். இப்படியே வகுப்பறையில் இருந்த பெரும்பாலான மாணவிகளும் பிறரைக் குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகள் பியர் குடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு மாணவி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது வெளியாகி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. கல்லூரி மாணவிகளுக்கு பியர் எப்படி கிடைத்தது என்பதுதான் தற்போதைய கேள்வியாக எழுந்துள்ளது. வகுப்பறையில் இப்படி பியர் குடித்து மாணவிகள் கூத்தடித்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் மாணவிகளில் இந்த வீடியோ பரவ காரணமானவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ