படுக்கையறையில் அலங்கோலமான நிலையில் சடலமாக கிடந்த புதுமண தம்பதி..!!

கொல்லம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). இவருக்கும் ஆர்யா (21) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த திருமணம் ஆர்யா குடும்பத்தினர் விருப்பத்திற்கு எதிராக நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் ஆர்யா தனது கணவர் விஷ்ணுவுடன் அவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஆர்யா கர்ப்பமாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அவர் பெற்றோர் மகளை காண விஷ்ணு வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்னர் வந்தனர். அப்போது அவர்களின் படுக்கையறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.  அந்த சமயத்தில் விஷ்ணுவின் தந்தையும் வீட்டில் இருந்தார்.

இதையடுத்து ஆர்யா குடும்பத்தார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விஷ்ணுவும், ஆர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் அலங்கோலமான நிலையில் சடலமாக கிடந்தனர். அவர்களை மீட்ட குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் மீண்டும் உறுதி செய்தனர். தம்பதியின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.