
சின்னத்திரை நடிகையான நிலானியை காதலித்து வந்த நிலையில் உதவி இயக்குனர் காந்தி லலித்குமாரை பிரிந்ததும், நிலானியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத அவர் கடந்த 16ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணையில் தெரியவந்தது.இந்நிலையில் சமூக வலைதளங்களில் நிலானியும் காந்தியும் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் படங்களும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்த நடிகை நிலானி, காந்தி லலித்குமார் தற்கொலையில் தன் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கும் தனக்கு தொடர்பு இல்லை எனவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நிலானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, காந்தி 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்ததும் அவருடன் பழகியதும் உண்மைதான்.ஆனால் காந்தி ஒரு பொம்பளை பொறுக்கி. பணத்திற்காக பல பெண்களுடன் பழகி ஏமாற்றியுள்ளார். இதனை தெரிந்துகொண்டு நான் அவரை விட்டு விலகிவிட்டேன்.
காந்தி லலித்குமார் குறித்து 2016ஆம் ஆண்டே போலீசில் புகார் கொடுத்துள்ளேன். காந்தி எனக்கு பலமுறை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த ஒருவாரமாக தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டினார்.
எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என் கணவர் என்னை கைவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார். இந்த நிலைமையில்தான் காந்தி என் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற உதவிகளை செய்தார்.எனக் கூறி கதறி அழுதார்.மேலும் அவரின் முழுமையான பேட்டி இதோ