பணிப்பெண்ணாக இருந்த தமிழ் நடிகையின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட பிரபல தொலைக்காட்சி! திடீரென அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகையான வாணி போஜன் இன்று பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.வாணி போஜன் 150க்கு மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். ஊட்டியை சேர்ந்த வாணி போஜன் கிங்ஃபிஷர் விமானத்தில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் வேலை புரிந்துள்ளார்.வாணி போஜன் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.விளம்பர மாடல் டூ சீரியல்க்கு வந்த வாணி போஜன் தற்போது சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

இயக்குநர் லோகேஷ் இயாக்கத்தில் ‘N4’ என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.ஆஹா தொடர் மூலம் சின்னதிரைக்கு வந்த தமிழ் மாடல் வாணி போஜன், பிரபல தொலைக்காட்சி தொடரில் சத்திய பிரியா என்ற கதாபாத்திரத்தின் மூலம் சினிமா வாய்ப்பினை பெற்றார்.2012ஆம் ஆண்டு சின்னத்திரை சீரியலுக்கு வந்த வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையிலும் கால்பதிக்கயுள்ளார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் வாணி போஜனுக்கு அவரது நண்பர்களும் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதேவேளை, தெய்வமகள் சீரியலுக்காக சிறந்த நடிகைக்கான விகடன் விருதை வாணி போஜன் 2017-ம் ஆண்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.N4 திரைப்படத்தின் புகைப்படம் இதோ