பரிசாக பெற்ற பணத்தை ரித்விகா என்ன செய்தார் தெரியுமா?… நிச்சயம் பாராட்டுவீங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முழுமையான வெற்றியை அடைந்த ரித்விகா தற்போது விஜய்சேதுபதி படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரித்விகா வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்ட நொடியில் அவர் விட்ட கூச்சலுக்கும், சிந்திய கண்ணீருக்கும் அளவே இல்லாமல் இருந்தது. ஆம் பிக்பாஸ் வீட்டில் எந்தவொரு கெட்டப்பெயர் வாங்காமல் கடைசிவரை வந்து வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளார். பிக்பாஸ் வெற்றியில் கிடைத்த 50லட்சம் பரிசுப் பணத்தினை அவர் என்ன செய்யப்போகிறார் தெரியுமா? ஆம் 50 லட்சத்தில் 25 லட்சத்தினை தன்னுடைய நீண்ட நாள் கனவு வீட்டுக்கும், மீதி 25 லட்சத்தினை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக கொடுத்துள்ளார்.

ரித்விகா வசதியான குடும்பமும் இல்லை, அவருக்கு உதவி செய்யும் அளவிற்கு குடும்ப பின்னணியும் இல்லை. ஆனாலும் இல்லாதவருக்குத் தான் மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் என்று கூறி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது ரித்விகா தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.