சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நடுவரான லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் பயன்படுத்திய என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… என்ற வசனத்தை தனக்கு சாதகமாக்கி புகழ்பெற்றவர் தான் ராமர். அதன்பின்பு பல ரீமிக்ஸ் பாடல்களைப் பாடி மேலும் புகழின் உயரத்திற்குச் சென்றார். தனது நகைச்சுவையான பேச்சினாலும், கொமடியினாலும் அரங்கத்தையே சிரிக்க வைத்த ராமர் தனது வாழ்வில் பட்ட கஷ்டத்தை பிரபல ரிவி சமீபத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளது.
இவரின் சிரித்த முகத்தினை மட்டுமே அவதானித்த மக்கள் இவருக்கு பின்பு இவ்வளவு சோகம் மறைந்திருப்பதை அப்போது தான் தெரிந்து கொண்டனர். தற்போது அவர் விமானத்தில் பயணம் மேற்கொண்ட தருணத்தில் அருகில் இருந்தவர் அவரைக் கலாய்த்ததும் அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷனும் காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.