பல இளைஞர்களுடன் டேட்டிங் சென்ற காதல் மனைவி..!! வேலூரில் அரங்கேறிய வினோத சம்பவம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.நகராட்சி சைக்கள் நிறுத்ததில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 11ஆம் திகதி அந்த பகுதியில் தலை அடிபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை யாரோ அடித்தும் கழுத்தை நெறித்தும் கொலை செய்தது தெரிவந்துள்ளது.ராஜ்குமாரின் சடலத்தை கைபற்றி விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அவரது மனைவி கவுசல்யாவின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.அப்போது அவர் ரமேஷ் என்ற நபருடம் அடிக்கடி பேசி வருவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கவுசல்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கணவர் கொலைக்கான மர்மம் தெரியவந்தது

.ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கவுசல்யாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.கணவரின் வருமானம் குடும்பதிற்கு போதாத நிலையில் அப்பகுதியை சேர்ந்த சீதா என்பவர் முலம் வயது குறைந்த இளைஞர்களுடன் டேட்டிங் சென்று வந்துள்ளார் கவுசல்யா.இதன் மூலம் நிறைய பணம் கிடைத்துள்ளது.அந்தவகையில் அறிமுகமான ரமேஷ் என்பவர் கவுசல்யாவின் அழகில் மயங்கி காதலித்துள்ளார்.

நிறைய பண உதவியும் செய்துள்ளார். இதனையறிந்த கணவர் மனைவியை கண்டித்துள்ளார்.இதனால் தங்களது ரகசிய காதலுக்கு இடையூராக இருக்கும் என்று கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டம் திட்டியுள்ளார் கவுசல்யா.

கூலிக்கு ஆட்களை ஏவிவிட்டனர். கொலை கும்பல் ராஜ்குமாருக்கு மதுவாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று அவரின் கழுத்தை நெறித்தும் தலையில் அடித்தும் கொலை செய்துள்ளனர்.ராஜ்குமாரை கொலை செய்துவிட்ட பின்னர் கள்ளக்காதலன் ரமேஷ் தொலை பேசி மூலம் தகவல் தெரிவித்ததையும் கவுசல்யா ஒப்புக்கொண்டார்.