சின்னத்திரையில் பல்வேறு தொடர்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது .அதுவும் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது எனலாம். இந்த வகையில் இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற தொடராகும்.
இதில் ஸ்டாலின், சுஜித்தா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,குமரன் தங்கராஜன், காவ்யா, சரவணன், விக்ரம் என பல முன்னணி நடிகர்கள் இந்த தொடரில் நடிக்கிறனர். இருந்த போதிலும் இந்த தொடரிலும் கதிர் முல்லை கதாபாத்திரத்திற்கு தான் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக உள்ளது.
வழக்கமாக எல்லா சீரியல்களிலும் வரும் வில்லி போன்ற விஷயங்கள் எதுவும் கிடையாது.சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், கூட்டு குடும்பத்தின் அழகு என சீரியல் சில நல்ல விஷயங்களை வெளிக்காட்டி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் வில்லி போல் சித்தரிக்கப்பட்டவர் மீனா என்ற ஹேமா. பின் நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் காமெடியாகவும் இவர் கதாபாத்திரம் கொண்டு செல்லப்பட்டது.
ஹேமா சீரியலில் நடிப்பதை தாண்டி சொந்தமாக ஒரு யூடியூப் பக்கத்தில் ஏதாவது வீடியோ பதிவு செய்து கொண்டே இருக்கிறார், ரசிகர்களிடமும் வரவேற்பு பெறுகிறது. தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மேக்கப் இல்லா புகைப்படம் வெளியிட ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர். இதோ அந்த மேக்கப் இல்லா மீனாவின் இன்னொரு முகம்,
View this post on Instagram