பார்க்க டீசெண்டாக இருக்கும் இந்த பெண் ATM-இற்குள் செய்யும் வேலையை பற்றுங்கள்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏ.டி.எம்.மில் வெள்ளிக்கிழமை இரவு 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது. ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்ததாக கரியமாணிக்கத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். ஆனால், ஏடிஎம் எந்திரத்தில் பணம் அடுக்கி வைக்கப்படும் பெட்டியின் கதவை, ஊழியர்கள் சரியாக பூட்டாமல் விட்டுச் சென்றதே இதற்கு காரணம் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சியில், ஏடிஎம்மிற்குள் செல்லும் சித்ரா எந்திரத்துக்குக் கீழே பணம் இருக்கும் பெட்டியின் கதவு திறந்து இருப்பதை கண்டார். உடனடியாக பீரோ கதவைத் திறப்பது போல் ஏடிஎம் பணப் பெட்டியின் கதவைத் திறந்த சித்ரா,

காய்கறியை அள்ளிப் போடுவது போல் பணத்தை ஒரு பையில் அள்ளிப்போட்டுக் கொண்டார். அப்போது வேறொரு நபர் பணம் எடுக்க உள்ளே வரவே, பேச்சு கொடுத்து சித்ரா அவரை சமாளித்து அனுப்பினார். அந்த நபர் சென்றதும், பணத்துடன் சித்ரா தப்பிச் சென்றார். இதை மும்பையில் உள்ள வங்கித் தலைமையகத்தில் இருந்து சிசிடிவி மூலம் க் கண்ட ஊழியர்கள், உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த ஆட்டோக்காரர்களிடம் விசாரித்து சித்ராவைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, தான் பணத்தைக் கொள்ளை அடிக்கவில்லை என்றும், பணப் பெட்டி திறந்து இருந்ததால் எடுத்து வந்ததாகவும் சித்ரா தெரிவித்ததார்.

இதை அடுத்து சித்ரா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த பணம் கைப்பற்றப்பட்டது. பணப் பெட்டியை பூட்டாமல் விட்டுச் சென்ற, பணம் நிரப்பும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்