பாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி…! ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். கடந்த சில நாட்களாக நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்து வருவதால் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆரம்பத்தில் நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும் தற்போது இந்த நிகழ்ச்சி எங்க போய் முடியுமோ என்ற அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களான பாலாஜி, நித்யா கணவன் மனைவி என்பது உலகறிந்த விடயமே. இவர்கள் தங்களது வாழ்வில் ஒன்று சேர்வதற்கு ஒரு முயற்சியாக இதனை பிரபல டிவி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.இதில் நித்தியா சில வாரங்களுக்கு முன்பு வெளியேறினார்.

அப்போது தனது மகள் போஷிகாவை கமலிடம் ஆசிர்வாதம் வாங்க வைத்தார். அதன்பின்பு அப்பாவான தாடி பாலாஜியிடம் போஷிகா பேசுகையில் சக போட்டியாளர்களும் கண்ணீர் சிந்தினர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பாலாஜியின் மகள் நித்யா ஆவேசமாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.