இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி ஐந்து வாரம் நிறைவடையும் நிலையில், முதல் வாரத்தில் யாரும் வெளியேற்றம் செய்யப்படவில்லை. இரண்டாவது வாரம் முதல்போட்டியாளராக உள்ளே நுழைந்த பாத்திமா வெளியேற்றப்பட்டார். மூன்றாவது வாரம் இரண்டாவது போட்டியாளராக வனிதாவும், நான்காவது வாரமான கடந்த வாரம் மோகன் வைத்தியா வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் சேரன், சரணவன், மீரா, சாக்ஷி, அபிராமி, கவின் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் இன்று கமல் யார் காப்பாற்றப்படுகிறார் என்பதை நிகழ்ச்சியில் அவதானிக்க மக்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

மீராவை இன்று வெளியேற்ற வாய்ப்பு குறைவாகவே இருந்து வருகின்றது. ஏனென்றால் கண்டெண்ட் குயினாக இருந்த வனிதாவின் இடத்தினை தற்போது நிரப்புவது மீரா என்பதால் அவரை வெளியேற்றமாட்டார்கள் என்று கூறப்படுகின்றது. இதனால் இந்த வாரம் அபிராமி அல்லது சாக்ஷி வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சாக்ஷி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை பட ரிலீசுக்குப் பிறகு தான் அபிராமி வெளியில் அனுப்பப்படுவார் எனத் தெரிகிறது. சாக்ஷிக்கும் மக்களிடையே நல்ல பெயரில்லை. ஆனால் மீராவுக்கு பதில் சாக்ஷி
இந்த வாரம் வெளியேறுகிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த வாரம் வைல்ட் கார்ட்டில் புதிய போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
