பிக்பாஸ் சீசன்-2 வின் மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் தெரியுமா. கருத்துக்கணிப்பு முடிவு இதோ

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இருந்தபோதிலும் பிக்பாஸ் முதல் சீசனை போல் இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்தது. இதை நிரூபிக்கும் விதத்தில் நேற்று கமல் ஹாசன் அவர்களும் இதே கருத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியது, இந்த வீட்டில் இருக்கும் யாரையும் மக்களுக்கு இன்னும் பிடிக்கவில்லை.நீங்கள் போலியாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். இதை பொய்யாக்கும் விதத்தில் நீங்கள் நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் பேவரட் போட்டியாளர் யார் என்று சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது.இதில் 10 ஆயிரம் வாக்குகள் வரை வந்துள்ளது, இந்த கருத்துக்கணிப்பில் 3600 வாக்குகளுக்கு மேல் பெற்ற ஜனனியே வெற்றி பெற்றுள்ளார்.

இவரை தொடர்ந்து மும்தாஜ் 3022, ஐஸ்வர்யா தத்தா 1158,டேனியல் 664 வாக்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர், இதில் மிகவும் குறைந்தபட்சமாக R J வைஷ்ணவி 24 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.முழு பட்டியல் கீழே