பிக்பாஸ் வீட்டிற்குள்ளே சென்று போட்டியாளர் ஒருவரை வெளியே அழைத்து வந்த கமல்ஹாசன்- இந்த வாரம் வெளியே போவது இவர்தான்? வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியே போவது யார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சென்ட்ராயன், பொன்னம்பலம், யாஷிகா, ஜனனி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து எலிமினேஷக்கு தேர்வு செய்யப்படுகிறார் பொன்னம்பலம். ஆனால் மக்கள் இதுநாள் வரை காப்பாற்றி வந்தனர்.

இன்று வீட்டை விட்டு வெளியேறப்போவது பொன்னம்பலம் தான் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் முதன்முறையாக கமல்ஹாசன் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.பின் எலிமினேட் ஆகப்போவது யார் படியுங்கள் என்று பொன்னம்பலத்திடம் கூறுகிறார், அவரும் பார்த்து சிரித்தபடியே இருக்கிறார்.

அதைப் பார்க்கும் போது பொன்னம்பலம் வீட்டைவிட்டு வெளியேறுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.இந்நிலையில் இந்த வாரம் பொன்னம்பலம் தான் வெளியே போகிறார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

மேலும் இது உண்மையா என்பது இன்றிரவு தான் தெரியவரும்.சென்றாயனுக்கு எதிராக வீட்டில் பலர் வாக்களித்தாலும், அவருக்கு அதிக ரசிகர்கள் வாக்களித்து காப்பாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ