பிக்பாஸ் வீட்டில் பொய்யாக இருப்பது யார்? இரவு நேரங்களில் என்ன நடக்கும்..?? வெளியே வந்த ஷாரிக் கொடுத்த முதல் பேட்டி

பிக்பாஸ் வீட்டில் இளம் பிரபலமாக நுழைந்தவர் ஷாரிக். இவர் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து வெற்றி பெறுவார் என்று மக்கள் நினைத்தனர்.ஆனால் சரியாக 50வது நாள் ஷாரிக் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார், இது போட்டியாளர்களை தாண்டி மக்களுக்கும் கொஞ்சம் சோகமான விஷயமாக இருந்தது.நிகழ்ச்சிக்கு பிறகு ஷாரிக் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் சென்ராயன் தான் பொய்யாக இருப்பதாகவும், டேனி தன்னிடம் அவர் இப்படி கிடையாது என்று கூறியிருக்கிறார் என்றார்.

மேலும் ஷாரிக், டேனி மிகவும் ஜாலியான ஒரு மனிதர், வீட்டில் அவரிடம் அனைவருக்கும் பிடிக்காதது குரல் தான்.பொன்னம்பலம் 5 நாள் ஒருமாதிரி இருப்பார், கமல்ஹாசன் அவர்கள் வந்தால் வேறொரு நபராக மாறிவிடுவார்.100 நாட்கள் இருக்க விருப்பம் தான்,

ஆனால் பரவாயில்லை வெளியே வந்தது மகிழ்ச்சி என்று நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார் மேலும் அவரை  கலாய்த்தவர்கள் பற்றி பேட்டியில் பேசியுள்ள அவர் “மீம் போட்டவர்கள், என்னை கலாய்த்தவர்களுக்கு நன்றி, அது என் பெயரை பிரபலமாகியிருக்கும்.

நான் யார் என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் பிக்பாஸ் வந்தேன்.அது நடந்துவிட்டது. எடுத்த கட்ட திட்டம் பற்றி யோசித்துக்கொண்டு தான் இருக்கிறேன். நிச்சயம் சூப்பர்ஸ்டார் ஆவேன்” என கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இரவு நேரங்களில் என்ன நடக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் அவர் பேசிய முழு வீடியோ பதிவு இதோ