பிக் பாஸ் வீட்டில் நடந்த மரணம் . பரிதாபமாக பறிபோன உயிர்.. தமிழ் பிக் பாஸ் 2 வீட்டில் பரபரப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் 82 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. விரைவில் இரண்டாவது சீசன் முடிவுக்கு வர உள்ளது.சென்னை பூந்தமல்லியை அடுத்து செம்பரபாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று

 

வருகிறது. இந்த செட்டில் பல தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களை சேர்ந்த தொழிலார்கள் அதிகம் வேலை செய்து வருகின்றனர்.இந்த செட்டிலேயே தங்கி வேலை பார்த்து வரும் ஏ.சி.மெக்கானிக் குணசேகரன் என்பவர் அரியலூர் மாவட்டம் மத்தூரை சேர்ந்தவராவார். இவர் நேற்று இரவு பிக் பாஸ் வீட்டின் இரண்டாவது தலத்தில் தன்னுடைய நண்பர்களுடன் உணவு அருந்தி விட்டு கை கழுவதற்காக ஓரமாக சென்றுள்ளார்.

அப்போது இவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னர் குணசேகரனை அவரச அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிழந்துள்ளார். இது குறித்து நசரத் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பிக்பாஸ் செட்டில் பரபரப்பு நிலவியுள்ளது.