பிச்சைகாரனுக்கு 500 ரூபாய்.. இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பற்றி பலருக்கும் தெரியாத நெகிழ்ச்சி தகவல்

நடிகர் மற்றும் அரசியல் பிரபலம் ஜே.கே.ரித்தீஷ் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது தமிழ் சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தியது. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர், என நடிகர் சங்கம் அவர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்திருந்தது. மேலும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் அவரது குணம் பற்றி மேலும் ஒரு தகவல் உள்ளது.. சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் அவர் சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும் போது பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை கேட்டுள்ளார்.

அவருக்கு 500 ருபாய் நோட்டை எடுத்து கொடுத்துள்ளார் ஜே.கே.ரித்தீஷ். அடுத்த இரண்டு நாட்களுக்கும் அதே நபர் மீண்டும் வந்துள்ளார், அதேபோல 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். இப்படி தன்னிடம் உதவி என்று கேட்டு வந்தால், தன்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்யும் குணம் கொண்டவர் ரித்திஷ் என்று அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர்.