பிரபல இயக்குனரால் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான அமலாபால்- அதிர்ச்சி தகவல் கூறிய நடிகை

மீ டூ இயக்கம் மூலம் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்த் திரைத்துறையினரின் உண்மையான முகம் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது.சினிமாவில் பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளான நடிகைகள் தொடர்ந்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை கூறி வருகின்றனர். 2005ம் ஆண்டு இயக்குநர் சுசி கணேசன் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கவிஞர் லீனா மணிமேகலையும் மீ டூ இயக்கம் மூலம் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நேரத்தில் நடிகை அமலாபாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு தானும் ஆளானதாக ஒரு பதிவு போட்டுள்ளார்.அதில் லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் மீது கூறிய குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறேன். திருட்டுப்பயலே 2 படபிடிப்பின் போது இயக்குநர் சுசி கணேசன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் தானும் அவரால் அவதிப்பட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார்.இதற்கு முன் சுசி கணேசன் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தற்கொலை செய்துகொள்ளவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.