பிரபல இளம் நடிகையுடன் ஆர்யாவுக்கு விரைவில் திருமணம்? பரபரப்பில் திரையுலகம்

நடிகர் ஆர்யா தற்போது நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2005-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. நடிகைகளால் பிளேபாய் என்று அழைக்கப்படும் ஆர்யா அவ்வப்போது கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொள்வார். இளம் பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பதே ஆர்யாவின் மிகப்பெரிய பலம். சமீபத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான கஜினிகாந்த் படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் நடித்தபோது நாயகி சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டதாகவும் தற்போது அது திருமணம் செய்து கொள்கிற அளவுக்குப் போயிருப்பதாகவும் கூறுகின்றனர். இப்போது சூர்யாவின் காப்பான் படத்தில், சாயிஷா நாயகியாகவும் ஆர்யா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.

இந்தப் படப்பிடிப்பு தளத்திலும் இவர்களது காதல் வளர்ந்து கொண்டிருக்கிறதாம். இருவரும் இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்தவர்கள். காப்பான் படப்பிடிப்பு முடிந்தவுடன் இருவரும் திருமணம் பற்றிய அறிவிப்பை

வெளியிடவிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.  திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிற இந்த விஷயம் செய்தியாகப் போகிறதா அல்லது வழக்கம்போல் வதந்தியாகிவிடுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.