பிரபல காமெடி நடிகர் கைது செய்து தர்ம அடி கொடுத்த பொலிசார்.. வெளியான பரபரப்பு தகவல்..!

தமிழில் தற்போது காமெடியில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் யோகிபாபு. இவர் சில வருடங்களுக்கு முன் நடு இரவில் பொலிசிடம் சிக்கிய யோகிபாபு, தர்ம அடி வாங்கியதாக அவர் தற்போது கூறியுள்ளார். தமிழில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகிபாபு பொலிசிடம் அடிவாங்கியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த போது ஒரு சில நாடகங்களில் நடித்து வந்தார்.

ஒரு முறை நாடகம் முடிந்து நள்ளிரவு வேளையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பொலிசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த நேரம் வேறு சென்னையில் மர்ம ஆசாமி ஒருவர் பைக் மற்றும் கார்களுக்கு பெட்ரோல் ஊத்தி நெருப்பு வைத்து எரித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இதனால் ஒருவேளை இந்த ஆசாமி யோகி பாபு ஆக இருக்கலாம் என பொலிசார் நினைத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது காது நரம்புகள் வலிக்கும் அளவிற்கு அடித்துள்ளனர்.

பின் நாடகத்தில் நடித்து விட்டு வந்ததாக யோகிபாபு நிரூபித்த பிறகு காவல் நிலையத்தில் இருந்து விடுவித்தார்களாம். இந்த சுவாரசியமான சம்பவத்தை தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்