பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினியை அள்ளிச் சென்ற சென்னை போலீஸ்!..!!! பல்வேறு மோசடிகளில் தொடர்பா வெளியான திடுக்கிடும் தொழில் பின்னணி

தமிழகத்தில் பல லட்சங்கள் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட தொலைக்காட்சி நடிகை அனிசாவின் கணவர், மேலும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளன.சின்னத்திரையில் பிரபலமான நடிகை அனிசா, A.C எந்திரங்கள் வாங்கியதில் ரூ.37 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.


தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் இருப்பவர் பூர்ணிமா என்கிற அனிசா(34). இவர் தனது கணவர் சக்திமுருகனுடன்(38) இணைந்து மின்சாதன பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார்.இந்த நிறுவனங்களுக்கு அனிசாவே பொறுப்பாளராகவும் இருந்து வந்ததால், வரவு-செலவு கணக்குகளை அவர் கையாண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் A.C எந்திரங்களின் மொத்த விற்பனையாளரான பிரசாந்த் என்பவரிடம், அனிசா-சக்திமுருகன் தம்பதி A.C எந்திரங்களை வாங்கி விற்று வந்துள்ளனர்.

அவற்றில் 107 A.C எந்திரங்களுக்கான பணத்தை அவர்கள் பிரசாந்திடம் நேரடியாக கொடுக்காமல், காசோலையாக அளித்துள்ளனர். ஆனால், அந்த காசோலைகள் பணம் இல்லாததால் திரும்பி வந்ததால், இதுகுறித்து பிரசாந்த்குமார் பொலிசில் புகார் அளித்தார்.