பிரபல சீரியல் நடிகையிடம் போட்டோ எடுப்பது போன்று உரசி கொடுமை செய்த நபர்! வாழ்க்கையே போயிருக்கும் என வேதனை

சீரியல் நடிகைகளில் வில்லியாக நடித்த சிலரை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படி வில்லியாக கலக்கி இப்போதும் ரசிகர்களால் அடையாளம் காணப்படுபவர் ராணி. இவர் நீதிமன்றம் பிரான்க் ஷோக்களுக்கு தடை விதித்தது வரவேற்பதாகவும், அப்படி ஒரு ஷோவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மோசமான சம்பவம் குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர், ஒரு சீரியல் படப்பிடிப்பில் மதிய உணவு சாப்பிட்டு ஸ்பாட்டுக்கு வந்தேன், அப்போது ஒருவர் எனது கையொப்பம் வேண்டும் என்று கேட்டார், நானும் போட்டேன். பிறகு போட்டோ எடுக்க கேட்டார் ஒப்புக்கொண்டேன்,

அவர் அந்த நேரத்தில் என் பக்கத்தில் வந்து கொஞ்சம் மோசமாக உரசி புகைப்படம் எடுத்தார். அப்போதும் அவர் செல்லவில்லை என்னதான் வேண்டும் என்று கேட்டால் நீதான் வேண்டும் என்றார், அப்படியே பயந்துவிட்டேன். உடனே காதுக்கு பக்கத்தில் வந்து சத்தமாக கத்தினார், அந்த நொடி என்னால் மறக்கவே முடியாது.

அவர் கத்தியதால் எனது காது சரியாக கேட்கவில்லை, அவர் செய்த காரியத்தால் பயந்து போனதால் இரண்டு நாள் பேச்சே வரவில்லை, மருத்துவமனையில் 1 வாரம் சிகிச்சை பெற்றேன். ஆனால் நான் பட்ட அத்தனை கஷ்டத்துக்கு பின்பு தான் தெரிகிறது,

அவர்கள் என்னிடம் அப்படி செய்ததற்கு பின் பிரான்க் ஷோ என்று. அதனால் தான் பிரான்க் ஷோ செய்ய கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது சந்தோஷமளிக்கிறது என்று கூறியுள்ளார்.