பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நடிகர் செந்திலின் உறவினரின் 300 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்பட்ட சம்பவத்தில் மைத்துனியே நகைகளை விற்றுவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருவலிங்கம். இவர் மனைவி உமா (40).இவரது சகோதரி சண்முக வடிவு. இவரது கணவர் பூபதி ராஜா. இவர் நகைச்சுவை நடிகர் செந்திலின் உறவினராவார்.இந்நிலையில் தான் சேர்த்து வைத்த 300 பவுன் நகைகளை உமாவிடம் கொடுத்த சண்முகவடிவு வங்கி லாக்கரில் வைக்க சொல்லியிருந்தார்.

இதனிடையில் சண்முகவடிவின் மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக லாக்கரில் உள்ள நகைகளை கொண்டு வரும் படி சண்முகவடிவு உமாவிடம் கூறியுள்ளார்.இதற்காக வங்கிக்கு உமா சென்று நகைகளை எடுத்த நிலையில் அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் நகைகளை பறித்து சென்றனர்.

இது குறித்து உமா பொலிசில் புகார் அளித்த நிலையில், பொலிசார் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.அப்போது அங்கு அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை எனவும், உமாவே நகைகளை எடுத்து கொண்டு நாடகமாடியதும் தெரியவந்தது.

அதாவது, நகைகளை அடகு வைத்து அவர் ஜாலியாக செலவு செய்துள்ளது தெரியவந்தது.இதையடுத்து பொலிசார் உமாவை கைது செய்து வேறேதும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்து வருகிறார்கள்.