பிரபல நடிகர் முரளியின் மகனா இது? கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! தீயாய் பரவும் வீடியோ

தமிழில் கண்டேன் காதலை, ஜெயங்கொண்டான், சேட்டை போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் தற்போது அதர்வாவை வைத்து ‘பூமராங்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் அதில் மாறுப்பட்ட திறைமையை வெளிப்படுத்தியிருந்த நடிகர் அதர்வாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தப் படத்தில் முகத்தில் தீக்காயம் ஏற்பட்ட நபராக அதர்வா ஒரு சில காட்சிகளில் தோன்றுவார். அதற்காக கைத்தேர்ந்த பிராஸ்தடிக் மேக்கப் கலைஞர்களைக் கொண்டு அவருக்கு தலை முழுவதும் மேக்கப் போடப்பட்டது.

அவர் இந்தக் கேரக்டருக்கு எப்படித் தயாராகிறார், ஒப்பனைக் கலைஞர்கள் அவருக்கு எப்படி தீக்காயம் ஏற்பட்டது போலான முகத்தை வரவைக்கிறார்கள் என்பது குறித்த புகைப்படங்கள் அவர்களின் உழைப்பினை காட்டுகின்றது. இந்த காட்சி சிறு நொடிகள் ஒளிபரப்பப்பட்டாலும் பின்னணியில் அதற்காக பல்வேறு கலைஞர்கள் உழைத்துள்ளனர். அவர்களின் உழைப்புக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.