பிரபல நடிகை திடீர் மரணம்…! மகனே அடித்து பட்டினி போட்ட சம்பவம்..! அதிர்ச்சியில் திரையுலகம்…!

பாகியா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா கபூர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு கீதா கபூரை அவரது மகன் ராஜா சிகிச்சைக்காக மும்பை கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கட்டணம் செலுத்தாமலே அங்கு இருந்து சென்றுவிட்டார். இதேபோல விமான பணிப்பெண்ணாக இருக்கும் நடிகையின் மகள் பூஜாவும் அவரை பார்க்க கூட வரவில்லை. பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த நடிகைக்கு திரைத்துறையினர் சிலர் உதவி செய்தனர்.

பின்னர் அவர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் அவருக்கு நேற்று உடல்நிலை சரியல்லாமல் போனது. இதையடுத்து அவர் கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு கீதா கபூர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நடிகை கீதா கபூருக்கு வயது 57. கீதா கபூரை அவரது மகனே அறைக்குள் அடைத்து பட்டினி போட்டு அடித்து சித்ரவதை செய்துள்ளார். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சிகிச்சைக்கு பணம் கொடுக்காமல் ஓடி விட்டார். இந்த சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர்.

இவர் வெற்றிகரமாக ஓடிய ‘பகீஷா’ படத்தில் மீனாகுமாரியுடன் நடித்து பிரபலமானார். ‘ரஷ்யா சுல்தான்’ உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ராஜா என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர்.

தற்போது வயதாகி விட்ட நிலையில் மும்பையில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்தார். சிகிச்சைக்கு பணம் செலுத்த கூட பணம் இல்லாமல் இறுதியில் பரிதாபமான முறையில் இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மற்ற நடிகைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.