பிரபல நடிகை ரம்பாவிற்கு மூன்றாவது குழந்தை பிறந்தது : என்ன குழந்தை தெரியுமா?

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை ரம்பா, இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு லாண்யா, சாஷா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நடுவில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்தார்.

இறுதியில் இருவரும் தங்களுக்கு இடையே இருந்த மனஸ்தாபங்களை முடித்துகொண்டு சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் நீதிமன்றம் உதவியோடு இப்போது இருவரும் இணைந்து வாழ்கின்றனர். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே 90களில் வைத்துஇருந்தார் ரம்பா.பல இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை ரம்பா. பின்னர் திருமணத்திற்கு பிறகு சினிமாத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

பின்னர் வருமானத்திற்காக நடிப்பு துறைக்குள் கால் அடி எடுத்து வைத்தார்.அதன் பிறகும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மூன்றாவது முறையாக கர்ப்பமான ரம்பாவிற்கு வளைகாப்பு செய்யப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது ரம்பா மூன்றாவது முறையாக கனடாவில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை செப்டம்பர் 23ம் திகதி பிறந்துள்ளது.